முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘விஜயகாந்த் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்புவார்…’ – எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை

‘விஜயகாந்த் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்புவார்…’ – எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை

விஜயகாந்த்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தித்தபோது...

விஜயகாந்த்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தித்தபோது...

எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வரவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜயகாந்த் – பிரேமலதா 33 ஆவது திருமண நாளையொட்டி இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரசேகர் கூறுகையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விஜயகாந்தை நேரில் சந்திக்கிறேன். அவர் நலமாக உள்ளார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் மலர்ந்தன. எனக்கு ஒரு பெரிய எனர்ஜி கிடைத்தது போல் உள்ளது. விரைவில் அவர் பழைய நிலைமைக்கு வந்து விடுவார் என்று நம்புகிறேன். விஜய் என்றாலே வெற்றி தானே. விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றிருந்தன. அவற்றில் செந்தூரப்பாண்டி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, குடும்பம் உள்ளிட்டவை ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது எஸ். ஏ. சந்திரசேகர் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், சமுத்திரக்கனி, இனியா, ரோகிணி, சரவணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை மறுதினம் திரைக்கு வர உள்ளது.

First published:

Tags: Vijayakanth