Home /News /entertainment /

விஜயகாந்த் நடிக்கும் படம் குறித்த அப்டேட்

விஜயகாந்த் நடிக்கும் படம் குறித்த அப்டேட்

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்தின் உடல்நிலை ஓரளவு தேறினாலும் அவரால் முன்புபோல் ஆக்ஷன் அதிரடி காட்சிகளில் நடிப்பது இயலாது என்பதால் அதற்கேற்றபடி அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார்கள்.

  • News18
  • Last Updated :
தீவிர அரசியலில் இறங்கிய பிறகும் அவ்வப்போது படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். உடல்நல குறைவு காரணமாக பல வருடங்களாக சினிமா பக்கம் அவர் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் அவர் விஜய் மில்டன் இயக்கிவரும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க சரத்குமார் சரண்யா பொன்வண்ணன் தலைவாசல் விஜய் உட்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். மேகா ஆகாஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மழை பிடிக்காத மனிதன் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் உடல்நிலை ஓரளவு தேறினாலும் அவரால் முன்புபோல் ஆக்ஷன் அதிரடி காட்சிகளில் நடிப்பது இயலாது என்பதால் அதற்கேற்றபடி அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார்கள். மொத்தம் இரு தினங்கள் மட்டுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது மழை பிடிக்காத மனிதன் படக்குழு படத்தின் இறுதிக் காட்சியை படமாக்க டையூ டாமன் சென்றுள்ளது. அங்குதான் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறார்கள். அங்கிருந்து திரும்பிய பிறகு விஜயகாந்த சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்க உள்ளனர்.



Also read... சுந்தர் சி. படத்தில் இணைந்த தொகுப்பாளினி டிடி!

விஜய் ஆண்டனி தற்போது கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதனும், சிஎஸ் அமுதன் இயக்கிவரும் ரத்தம் படமும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வருடம் அவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன், ரத்தம், கொலை, பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளன, அத்துடன் அருண் விஜய்யுடன் நடித்துள்ள அக்னி சிறகுகள் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vijay Antony, Vijayakanth

அடுத்த செய்தி