ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரைன் லாராவுடன் விஜயகாந்த்... கவனம் பெறும் புகைப்படம்!

பிரைன் லாராவுடன் விஜயகாந்த்... கவனம் பெறும் புகைப்படம்!

விஜயகாந்த் - பிரைன் லாரா

விஜயகாந்த் - பிரைன் லாரா

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் விஜயகாந்த்  கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவுடன் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  

    தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார்.

    விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன. இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார்.

    கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே... நடிகர் கமல் ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

    பின்னர் அரசியலில் நுழைந்து அங்கும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் பழையபடி கர்ஜிக்க வேண்டுமென காத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவுடன் விஜயகாந்த் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Vijayakanth