ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KGF ஹீரோ கெட்டப்பில் கேப்டன் மகன்! வைரலாகும் போட்டோ!

KGF ஹீரோ கெட்டப்பில் கேப்டன் மகன்! வைரலாகும் போட்டோ!

சண்முக பாண்டியன்

சண்முக பாண்டியன்

சண்முக பாண்டியனின் சமீபத்திய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் 2015ம் ஆண்டு வெளிவந்தது.ஆனால் சகாப்தம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அந்த படத்தில் விஜயகாந்தும் நடித்துள்ளார்.

  பின்னர் இரண்டாவது படமாக மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதுவும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில் சினிமாவுக்கு சிறிய இடைவெளி கொடுத்தார் சண்முக பாண்டியன். இப்பொழுது சசிகுமார் இயக்கி வரும் ஒரு வெப் தொடரில் நடித்து வருவதாக கூறப்பட்டது.
   
  View this post on Instagram

   

  A post shared by Shanmuga pandian (@shanmugapandian)  இந்த வெப் சீரிஸ் குற்றப்பரம்பரை எனும் நாவலை தழுவி உருவாக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அப்டேட் வேறு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜயதசமியை அடுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ள சண்முக பாண்டியன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்

  Read More: 'வாழ்க்கையின் முக்கிய பயணம்' - காதல் கசிந்துருகி திருமண அறிவிப்பை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

  அந்த புகைப்படத்தில் KGF படத்தில் வரும் யாஷ் தோற்றத்தில் உள்ளார் சண்முக பாண்டியன். யாஷ் போல பெரிய தாடியும் ஹேர் ஸ்டைலும் வைத்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Shanmuga pandian (@shanmugapandian)  கன்னட சினிமாவில் வெளியாகி பான் இந்தியா மூவியாக வசூலை வாரிக்குவித்த திரைப்படம் கேஜிஎப். இப்படத்தின் நாயகன் யாஷுன் லுக் இந்தியா முழுவதும் இளைஞர்களை கவர்ந்தது.  அப்படத்தில் பெரிய தாடி கோட்ஷூட் என ராக்கி பாயாக யாஷ் நடித்திருப்பார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: KGF, Kollywood, Tamil Cinema, Vijayakanth