Vishal - Vijayakanth: விஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த்!

Vishal - Vijayakanth: விஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த்!

விஜயகாந்த் - விஷால்

விஷால் வீணாக செலவு செய்ய இருந்த பெரும் பணத்தை விஜயகாந்த் காப்பாற்றி தந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை.

  • Share this:
    விஷால் வீணாக செலவு செய்ய இருந்த பெரும் பணத்தை விஜயகாந்த் காப்பாற்றி தந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை.

    ஹீரோவாக ஒரு ரவுண்ட் வலம் வந்து, இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று சுந்தர் சி. மீண்டும் இயக்கத்துக்கு திரும்பிய காலகட்டம். அவரது இயக்கத்தில் கலகலப்பு வெளியானது. அனைத்து சென்டர்களிலும் படம் பம்பர் ஹிட். அடுத்து விஷாலை வைத்து மதகஜராஜா படத்தை இயக்கினார். அஞ்சலி, வரலட்சுமி என இரண்டு நாயகிகள். படத்துக்கு எந்தளவு வரவேற்பு இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

    ஆனால், படத்தை தயாரித்த ஜெமினி பிலிம்ஸின் கடன்கள் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விஷாலுக்கு அது தன்மானப் பிரச்சனை. படத்தை எப்படியாவது வெளியிட முயன்றார். அது முடியாமல் போக, சொந்தமாக படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்து, சில லட்சங்கள் செலவு செய்தார். இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் அவரை அழைத்துப் பேசினார்.

    அடுத்தவர்கள் கடன்களை சொந்த தோளில் சுமப்பதில் முன்னோடி விஜயகாந்த். "ஒரு படம் போனால் போகுது. அடுத்தப் படத்தில் நடிக்கிற வேலையைப் பார். அடுத்தவன் கடனுக்காக நீ தலையைக் கொடுத்தால், பணமும் போகும், மரியாதையும் போகும்" என்று அவர் விஷாலை எச்சரிக்க, அவர் உஷாராகி மதகஜராஜாவை வெளியிடும் முயற்சியிலிருந்து பின் வாங்கினார். அந்தவகையில் பல கோடிகளை விஜயகாந்த் விஷாலுக்கு லாபப்படுத்தி தந்தார்.

    இந்த பிளாஷ்பேக்கை இப்போது சொல்ல காரணம், 9 வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிப்போன மதகஜராஜா விரைவில் வெளியாகிறது. திரையரங்கில் அல்ல ஓடிடி யில். அதற்கான பேச்சுவார்த்தையை ஜெமினி பிலிம்ஸ் வெற்றிகரமாக முடித்துள்ளது என்கிறார்கள். விரைவில் முறைப்படி அறிவிப்பு வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: