Home /News /entertainment /

அறிவிப்புடன் நின்றுபோன விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக்கின் இந்நாட்டு மன்னர்கள்

அறிவிப்புடன் நின்றுபோன விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக்கின் இந்நாட்டு மன்னர்கள்

விஜயகாந்த் - கார்த்திக்

விஜயகாந்த் - கார்த்திக்

இந்நாட்டு மன்னர்களில் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் இணைந்து நடிப்பதாக முடிவானது. இசை இளையராஜா.

அறிவிப்புடன் நின்று போன படங்கள் நிறைய இருக்கின்றன. சில படங்கள் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நின்று போயுள்ளன. சில பாதி முடிந்த பிறகு. முழுப்படமும் முடிந்த பிறகு வெளியாகாமல் போன படங்களும் உள்ளன.  விஷாலின் மதகஜராஜா, விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் அந்தவகை. இப்படி வெளியாகாத படங்கள் ஏகப்பட்ட வெரைட்டியில் இருக்கையில் இந்நாட்டு மன்னர்களுக்கு மட்டும் என்ன விசேஷம்? விசேஷம் இருக்கிறது. இந்நாட்டு மன்னர்கள் நடிகர் சங்க அறக்கட்டளைக்காக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு முக்கால் நூற்றாண்டை தொடும் பாரம்பரியம் உள்ளது. நவாப் ராஜமாணிக்கம் குழுவில் நடித்து வந்த சோமசுந்தரம் என்ற நடிகர்தான் நடிகர் சங்கம் தொடங்குவதற்கான முதல் விதையை போட்டவர். அப்போது நாடகத்தில் நடிப்பது கலையாகவும், முக்கியமான தொழிலாகவும் இருந்தது. சின்ன வயதிலேயே நாடக கம்பெனில் சேர்ந்து, அங்கேயே தங்கி, அங்குள்ள வேலைகளை செய்து, நடிப்புப் பயிற்சி எடுத்து நடிப்பார்கள். நாற்பதுகளின் பிற்பகுதியில் தொழில்முறை அல்லாத சீஸனல் அமெச்சூர் நடிகர்களும் அதிகளவில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். இதனால், தொழில்முறை கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சிலநேரம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு தொழில்பாதுகாப்பை தருவதற்கும், அவர்களை ஒன்றிணைக்கவும் தொடங்கப்பட்டது தான் நடிகர் சங்கம்.

அன்று தென்னிந்திய சினிமா மதராசப்பட்டணம் என்ற இன்றைய சென்னையை மையப்படுத்தி இயங்கியதால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை பெற்றது. அதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இடம்பெற்றதும் இதனால்தான். 1952-ல் நடிகர் சங்கம் அடுத்தக்கட்டத்தை எட்டியது. எம்ஜிஆர் போன்றவர்கள் அதில் உறுப்பினரானார்கள். அதன் பிறகு சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். என பல நடிகர்கள் அதில் நிர்வாகிகளாக இருந்தனர். நடிகர் சங்க கட்டடம் கட்டியதில் ஏற்பட்ட கடன்கள் பல வருடங்கள் அடைக்கப்படாமல் நான்கு கோடிகளை தாண்டியது. அந்த நேரத்தில் தான் 2000-ஆம் ஆண்டில் அப்போதைய தலைவர் ராதாரவி மற்றும் பலரின் வற்புறுத்துதலால் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவரானார். 2002-ல் கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர், மலேசியா சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தினார். பிறகு 2004-ல் மீண்டும் துபாய், அபுதாபி சென்று கலை நிகழ்ச்சி நடத்தி பல வருடங்களாக இருந்த நடிகர் சங்கக் கடனை அடைத்தார். இதற்கு முன் படம் எடுத்து கடனை அடைக்க விஜயகாந்த் முயற்சி செய்தார். அதன்படி தொடங்கப்பட்டதுதான் இந்நாட்டு மன்னர்கள்.

Vijayakanth, Sathyaraj, Prabhu and Karthik Innattu Mannargal film stopped with the announcement, innattu mannargal, innattu mannargal vijayakanth, innattu mannargal karthik, innattu mannargal prabhu, innattu mannargal movie, innattu mannargal tamil movie, innattu mannargal sathyaraj, இந்நாட்டு மன்னர்கள், இந்நாட்டு மன்னர்கள் படம்,

இந்நாட்டு மன்னர்களில் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் இணைந்து நடிப்பதாக முடிவானது. இசை இளையராஜா. விஜயகாந்த், கார்த்திக்கை வைத்து பல படங்கள் இயக்கிய அமீர்ஜான் படத்தை இயக்குவதாகவும் தீர்மானமானது. தடபுடலாக விளம்பரங்களும் செய்தனர். படத்தில் நடிக்கும் யாருக்கும் சம்பளம் இல்லை என்பது முதல்விதி. ஆனால், இந்நாட்டு மன்னர்கள் அறிவிப்போடு கைவிடப்பட்டது. படம் எடுத்து கடனை அடைக்கலாம், நிதி திரட்டலாம் என நடிகர் சங்கம் பலமுறை முயற்சி செய்தது. ஆனால், அப்போதெல்லாம் தோல்வியே கண்டது.

நிறைமாத கர்ப்பத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம் - வைரலாகும் வீடியோ!

Vijayakanth, Sathyaraj, Prabhu and Karthik Innattu Mannargal film stopped with the announcement, innattu mannargal, innattu mannargal vijayakanth, innattu mannargal karthik, innattu mannargal prabhu, innattu mannargal movie, innattu mannargal tamil movie, innattu mannargal sathyaraj, இந்நாட்டு மன்னர்கள், இந்நாட்டு மன்னர்கள் படம்,

மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதன் தலைவராக திலீப் இருந்த போது அவரே முன்னின்று டுவென்டி 20 என்ற படத்தை தயாரித்தார். முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், திலீப், பாபு ஆண்டனி, ஜெகதி ஸ்ரீகுமார், ஜெகதீஷ், மது, சித்திக், பாவனா, காவ்யா மாதவன், சுகுமாரி உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இதில் பணம் வாங்காமல் நடித்தனர். இவர்கள் அனைவரும் நடிப்பதற்கேற்ற வகையில் கதையும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. ஜோஷி படத்தை இயக்கினார். 2008-ல் வெளியான இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று அம்மாவுக்கு பெருமளவு நிதியை ஈட்டித் தந்தது. நடிகை காரில் கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கமான அம்மா திலீப்புக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்கு திலீப்பின் இதுபோன்ற செயல்களும் முக்கிய காரணமாகும்.

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!

Vijayakanth, Sathyaraj, Prabhu and Karthik Innattu Mannargal film stopped with the announcement, innattu mannargal, innattu mannargal vijayakanth, innattu mannargal karthik, innattu mannargal prabhu, innattu mannargal movie, innattu mannargal tamil movie, innattu mannargal sathyaraj, இந்நாட்டு மன்னர்கள், இந்நாட்டு மன்னர்கள் படம்,

தென்னிந்திய நடிகர் சங்கம் இப்போதும் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று விஷால் சூளுரைத்து வருடங்கள் பல ஓடிவிட்டது. எப்படி சங்கத்தை லாபத்துடன் நடத்துவது என்பதை நமது நடிகர்கள் சாதிச்சங்கங்களிடமிருந்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
Published by:Shalini C
First published:

Tags: Actor sathyaraj, Karthik, Vijayakanth

அடுத்த செய்தி