ரஜினிகாந்த் முன்பு விஜயகாந்த் தரையில் உட்கார்ந்ததால், பதறிப்போன ரஜினி அவரிடம் செல்லமாக கோபப்பட்டாராம்.
தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். 80, 90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதோடு குடும்பப் பின்னணியைக் கொண்ட கதைகளிலும், அரசியல் கதைகளிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த், பின்னர் அரசியலில் நுழைந்து தனக்கென கட்சியையும் ஆரம்பித்தார். தேமுதிக-வை நிறுவிய அவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சினிமாவிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகினார்.
Vikram: மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!
விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜன். ஆனால், அவர் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக பிரபல இயக்குனர் எம். ஏ. ராஜா, விஜயராஜன் என்ற பெயரின் முதல் பாதியையும், ரஜினிகாந்த் பெயரிலுள்ள இரண்டாம் பாதியையும் இணைத்து, விஜயகாந்த் எனப் பெயரிட்டுள்ளார். அதோடு விஜயகாந்தும் ரஜினி மீது அளவுக்கடந்த அன்பை கொண்டிருந்துள்ளார்.
சஞ்சீவ் வாங்கிய சூப்பர் விருது... ஆனந்த கண்ணீரில் ஆல்யா மானசா!
ஒரு முறை நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், விழா ஒன்றில் கலந்துகொள்ள ரஜினியை நேரில் அழைக்க சென்றபோது அவர் முன்பு தரையில் அமர்ந்துவிட்டாராம். இதனால் பதறிப்போன ரஜினி, 'என்ன விஜி இப்படி பண்ற' என்று செல்லமாக கோபித்துக் கொண்டாராம். அந்தளவு ரஜினி மீது விஜயகாந்த் மரியாதை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.