Home /News /entertainment /

ஒல்லியான தேகத்தில் ஆளே மாறிப்போன கேப்டன் விஜயகாந்த் - லேட்டஸ்ட் படங்கள்!

ஒல்லியான தேகத்தில் ஆளே மாறிப்போன கேப்டன் விஜயகாந்த் - லேட்டஸ்ட் படங்கள்!

மகன்களுடன் விஜயகாந்த்

மகன்களுடன் விஜயகாந்த்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சினிமாவிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகினார்.

    இளைய மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய விஜயகாந்த், அந்தப் படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். 80, 90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதோடு குடும்பப் பின்னணியைக் கொண்ட கதைகளிலும், அரசியல் கதைகளிலும் நடித்துள்ளார்.

    சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த், பின்னர் அரசியலில் நுழைந்து தனக்கென கட்சியையும் ஆரம்பித்தார். தேமுதிக-வை நிறுவிய அவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சினிமாவிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகினார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் உள்ளார். மேற்படி அமெரிக்காவில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் அவ்வப்போது விஜயகாந்தின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெறும்.

    முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே விற்றுத் தீர்ந்த பீஸ்ட் டிக்கெட்டுகள்!


    நாக சைத்தன்யாவுடன் இணைந்த வெங்கட் பிரபு - வெளியான அட்டகாச அறிவிப்பு!

    அந்த வகையில் விஜயகாந்த் இன்று தனது ட்விட்டரில் சில படங்களை வெளியிட்டுள்ளார். தனது இளையமகன் சண்முகப்பாண்டியனின் பிறந்தநாள் கொண்டாத்தில் எடுத்துக் கொண்ட படங்கள் தான் அவைகள். ஒல்லியான தேகத்தில் இருக்கும் விஜயகாந்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijayakanth

    அடுத்த செய்தி