விஜயகாந்தின் சமீபத்தி படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன. இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார்.
பின்னர் அரசியலில் நுழைந்து அங்கும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் பழையபடி கர்ஜிக்க வேண்டுமென காத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.
தனுஷ் பட இயக்குநரை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்ட தன்யா பாலகிருஷ்ணா?
View this post on Instagram
இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் விஜயகாந்த் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijayakanth