Home /News /entertainment /

எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

விஜயகாந்த்

விஜயகாந்த்

அவ்வப்போது விஜயகாந்தின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெறும்.

    நடிகர் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். 80, 90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதோடு குடும்பப் பின்னணியைக் கொண்ட கதைகளிலும், அரசியல் கதைகளிலும் நடித்துள்ளார்.

    சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த், பின்னர் அரசியலில் நுழைந்து தனக்கென கட்சியையும் ஆரம்பித்தார். தேமுதிக-வை நிறுவிய அவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சினிமாவிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகினார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் உள்ளார். மேற்படி அமெரிக்காவில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் அவ்வப்போது விஜயகாந்தின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெறும்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்சிகளுக்காக நிஜமாகவே குடித்தாரா ஜீவா? வீடியோ உள்ளே!



    அதேபோல தற்போதும் விஜயகாந்தின் சமீபத்திய படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கம்பீரமாக இருந்த அவர், உடல்நலக்குறைவால் உடல் இளைத்து, முகமே மாறி, அடையாளம் தெரியாத தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதைப்பார்த்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, Vijayakanth

    அடுத்த செய்தி