Home /News /entertainment /

"சக்கரை கவுண்டர்" மறைவுக்கு "சின்ன கவுண்டர்" இரங்கல்...

"சக்கரை கவுண்டர்" மறைவுக்கு "சின்ன கவுண்டர்" இரங்கல்...

விஜயகாந்த், சலீம் கவுஸ்

விஜயகாந்த், சலீம் கவுஸ்

பிரபல நடிகர் சலீம் கவுஸ் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விஜயகாந்த் நடித்த சின்னக் கவுண்டர் படத்தில் சக்கரைக் கவுண்டராக நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார் சலீம் கவுஸின் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழ் படங்கள் மட்டுமில்லாது, சில பாலிவுட் மற்றும் பிறமொழி படங்களில் நடித்த மூத்த நடிகர் சலீம் கவுஸ். இன்று தனது 70-வது வயதில் காலமானார். திறமையான நடிகராக கோலிவுட்டில் அறியப்படும் இவர், கமல்ஹாசன் நடித்த 'வெற்றி விழா' படத்தில் ஜிந்தா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல விஜயகாந்த்தின் சின்னக் கவுண்டர் படத்தில் சக்கரைக் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர்.

    2010-ல் இந்தியில் வெளியான 'வெல் டன் அப்பா'படத்துக்குப் பிறகு, ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ள திரில்லர் படமான 'கா - தி ஃபாரஸ்ட்' படத்தில் ஆண்ட்ரியா வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞராகவும், சலீம் கவுஸ் வனவிலங்கு காப்பாளராகவும் நடித்துள்ளனர்.

    'சின்ன கவுண்டர்', 'திருடா திருடா' போன்ற படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானாலும், விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் வேதநாயகமாக நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார் சலீம்.

    Salim Ghouse: சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் பட வில்லன் சலீம் கவுஸ் காலமானார்

    சலீம் கவுஸின் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு குறித்த விஜயகாந்த் ஃபேஸ்புக் பதிவில், ‘நடிகர் சலிம் கவுஸ் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் 'சக்கரை கவுண்டர்' கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

    அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Vijayakanth

    அடுத்த செய்தி