Home /News /entertainment /

ஷாருக்கான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்? லீக்கான புகைப்படம் உண்மையா?

ஷாருக்கான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்? லீக்கான புகைப்படம் உண்மையா?

ஷாருக்கான் - விஜய்

ஷாருக்கான் - விஜய்

அட்லி கோரிக்கையை ஏற்று ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா நடிகர் விஜய்? 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாரிசு திரைப்படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு  நடிகர் விஜய் சென்னை திரும்பினார்.வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் ஐந்தாம் கட்டப்பட பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது . அதை தொடர்ந்து ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வந்தார்  இயக்குனர் வம்சி.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

அதில் நடிகர் விஜய் ரஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நடிகர் விஜய் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வானகரத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.  இதற்கிடையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகின்றது.

லீக்கான புகைப்படம்


ஷாருக்கான் நடிக்கும் ஜகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈசிஆரில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் அந்த அரங்கத்திற்கு சென்றதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay, Atlee, Kollywood, Shah rukh khan, Tamil Cinema

அடுத்த செய்தி