விஜய் உடன் மோதுகிறாரா விஜய் சேதுபதி...? பிகில்-க்கு போட்டியாக சங்கத் தமிழன்!

Web Desk | news18
Updated: July 10, 2019, 7:24 PM IST
விஜய் உடன் மோதுகிறாரா விஜய் சேதுபதி...? பிகில்-க்கு போட்டியாக சங்கத் தமிழன்!
சங்கத் தமிழன் | பிகில்
Web Desk | news18
Updated: July 10, 2019, 7:24 PM IST
பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஆக்‌ஷன் படமான சங்கத் தமிழனையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பிகில் படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய் நடித்திருப்பது போல, சங்கத் தமிழன் படத்திலும் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

2019-ம் ஆண்டின் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகிய நிலையில், அதேபாணியில் விஜய் - விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களை 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வீடியோ பார்க்க: சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் படங்கள்!

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...