தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் வெற்றிமாறன் – விஜய் காம்போவில் படம் எப்போது வரும் என்பது குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தனித்துவமிக்க தனது படங்களால் வெற்றிமாறன் தனக்கென ஒரு பிராண்டை கோலிவுட்டில் உருவாக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.
தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே குவித்து வரும் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இருப்பினும், கால்ஷீட், தயாரிப்பு நிறுவனம், திரைக்கதை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த காம்போ ஏற்படுவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க - கேரளாவில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா… கொச்சி கோயிலில் சிறப்பு தரிசனம்
தற்போது வெற்றி மாறன் சூரியின் நடிப்பில், விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் உருவாகி வரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதன்பின்னர் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படம் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்னொரு பக்கம் விஜய் தனது 66வது படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என பரவலாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க - இளையராஜா – யுவன் இசையில் உருவாகும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்… விரைவில் ஷூட்டிங் ஆரம்பம்
வாடிவாசல், தளபதி 67 படங்களுக்கு பின்னர் விஜய் – வெற்றி மாறன் காம்போவில் படம் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்க்காக ஏற்கனவே வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியதாகவும், சில காரணங்களுக்காக இந்த ப்ராஜெக்ட் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.