முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல திரையரங்கில் 'விக்ரம்' பட சாதனையை முறியடித்த வாரிசு - ரூ.300 கோடி வசூலை நெருங்குவதாக தகவல்

பிரபல திரையரங்கில் 'விக்ரம்' பட சாதனையை முறியடித்த வாரிசு - ரூ.300 கோடி வசூலை நெருங்குவதாக தகவல்

கமல்ஹாசன் - விஜய்

கமல்ஹாசன் - விஜய்

உலக அளவில் வாரிசு படம் இதுவரை ரூ. 275 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் உலகமெங்கும் நல்ல வசூலைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் குடும்ப சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் மகிழ்ச்சியான விஜய்,  படக்குழுவினருக்கு சமீபத்தில் விருந்தளித்தார்.

சென்னையிலும், ஹைதராபாத்திலும்  வாரிசு படத்தின் வெற்றியை விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பாண்டிச்சேரி பிவிஆர் திரையரங்கில் மற்ற திரைப்படங்களை விட இரு மடங்கு அதிகமான காட்சிகள் வாரிசு படத்துக்காக திரையிடப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி மரியம் திரையரங்கில் அதிக பார்வையாளர்கள் வருகை தந்த படம் என்ற விக்ரம் படத்தின் சாதனையை வாரிசு படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் வாரிசு படம் ரூ. 193.94 கோடியும், வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளதாம். மேலும் உலக அளவில் வாரிசு படம் இதுவரை ரூ. 275 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுறது. இதனையடுத்து விரைவில் இந்தப் படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay