ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘வாரிசு’ படத்தின் அடுத்த அப்டேட்… இசை உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…

‘வாரிசு’ படத்தின் அடுத்த அப்டேட்… இசை உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…

விஜய் - தமன்

விஜய் - தமன்

வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பாடல் வெளிவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு யூட்யூபில் ஏராளமான ஃபாலோயர்ஸ் இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். வாரிசு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி, வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி

    வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பாடல் வெளிவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் இருந்து வாரிசு படக்குழுவினர் புரோமோஷன் பணிகளை முழு வீச்சில் ஆரம்பிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாடல் வெளியீட்டு விழா மேடையில் பதற்றம்… தடுமாற்றத்துடன் பேசிய ஹீரோ அஸ்வின்…

    சமீபத்தில் பேட்டி அளித்திருந்த வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி, படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் வந்திருப்பதாகவும், ஃபேன் பாய் போன்று தமன் பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாகவும் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.  இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு உரிமத்தை இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டி – சீரிஸ் (T-Series) கைப்பற்றியுள்ளது.

    டி சீரிஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலுக்கு 228 மில்லியன் பேர் ஃபாலோயர்ஸாக உள்ளனர். இந்தியாவிலேயே மிக அதிகமான ஃபாலோயர்ஸை கொண்ட யூடியூப் சேனலாக இந்த சேனல் இருக்கிறது. டி சீரிஸ் தமிழ் சேனலுக்கு 2.71 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இந்தியாவிலேயே பிரபலமாக அதேநேரம் முன்னணியில் இருக்கும் நிறுவனம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay