வாரிசு படத்திலிருந்து நாளை வெளிவரவுள்ள தீ தளபதி பாடலின் மேக்கிங் வீடியோவில் சிம்பு இடம்பெறுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பாடலை பாடியதற்காக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
சினிமா சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு… வெற்றிமாறன் பட ஷூட்டிங்கின்போது விபரீதம் ஏற்பட்டதாக தகவல்
இந்த நிலையில் எஸ்.தமன் இசையில் உருவான ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அந்தப் பாடலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரீல்ஸ் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
WATCH – மீண்டும் ரிலீஸாகும் ரஜினியின் பாபா பட ட்ரெய்லர்
இந்த நிலையில் வாரிசு படத்தின் இராண்டாவது பாடலை நாளை மாலை 4 மணிக்கு வெளியிடுகின்றனர். அந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அதற்கு தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. அதுவும் 'தீ தளபதி' பாடலை மிகவும் சிறப்பாக்கியதற்கு நன்றி என கூறியுள்ளது. அந்தப் பாடல் மேக்கிங் வீடியோவிலும் சிலம்பரசன் நடித்துகொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
Thank You @SilambarasanTR_ sir for making #TheeThalapathy much more special with your voice!#VarisuSecondSingle from Tomorrow 4 PM 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #Varisu #VarisuPongal #30YearsOfVijayism pic.twitter.com/zA9DlFFxHU
— Sri Venkateswara Creations (@SVC_official) December 3, 2022
விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சீரான இடைவெளியில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. தீ தளபதி பாடலின் டீசர் வீடியோ இன்று அல்லது நாளை காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Simbhu, Actor Vijay