Home /News /entertainment /

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சரத்குமார்... இயக்குனர், தயாரிப்பாளர் வாழ்த்து...

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சரத்குமார்... இயக்குனர், தயாரிப்பாளர் வாழ்த்து...

சரத்குமாருடன் தில் ராஜு, வம்சி

சரத்குமாருடன் தில் ராஜு, வம்சி

Varisu SarathKumar : செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படப்பிடிப்பு தளத்தில், நடிகர் சரத்குமார் தனது 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கி வருகிறார்.

    முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வாரிசு படத்தை தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

    தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது 68 ஆவது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் நேற்று கொண்டாடினார். இதையொட்டி சரத்குமாருக்கு பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு வாரிசு படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.



    தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி மற்றும் நடிகர்கள் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

    விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியீடு

    குடும்ப கதையாக உருவாக்கப்பட்டு வரும் விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Sarathkumar

    அடுத்த செய்தி