Home /News /entertainment /

படப்பிடிப்பு தளத்தில் வாரிசு இயக்குநர் போட்ட தடை

படப்பிடிப்பு தளத்தில் வாரிசு இயக்குநர் போட்ட தடை

வாரிசு

வாரிசு

'வாரிசு' படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், சங்கீதா கிரிஷ், ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் லீக்காவதால், இனி படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல் ஃபோன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளுக்கு தடை போட்டுள்ளார் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி.

    தளபதி விஜய் ‘வாரிசு’ படத்தின் முக்கியமான நீண்ட ஷூட்டிங் ஷெட்யூலுக்காக விசாகப்பட்டினத்தில் இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு தளத்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. அதன் மூலம் விஜய்யைப் பார்ப்பதில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், படத்தின் சுவாரஸ்யம் இழக்கப்படும் என்பதால் வருத்தத்தில் உள்ளனர் படக்குழுவினர்.

    இதை கவனத்தில் கொண்ட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, 'வாரிசு' படப்பிடிப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியது மட்டுமின்றி, செல்போன் மற்றும் பிற கேஜெட்டுகளுக்கு முழு தடையும் போட்டுள்ளார். இனிமேல் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இதுபோன்ற பொருட்களை ஷூட்டிங் முடிந்த பிறகுதான் பயன்படுத்த முடியும். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தில் ராஜு தயாரிக்கும் 'வாரிசு' படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், சங்கீதா கிரிஷ், ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை தமன். 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி