ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு.. துணிவு? யார் பேனர் பெருசு? போட்டி போட்டுக்கொண்டு பேனர் வைத்த விஜய்- அஜித் ரசிகர்கள்!

வாரிசு.. துணிவு? யார் பேனர் பெருசு? போட்டி போட்டுக்கொண்டு பேனர் வைத்த விஜய்- அஜித் ரசிகர்கள்!

துணிவு மற்றும் வாரிசு பேனர்

துணிவு மற்றும் வாரிசு பேனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர். விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், அஜித் குமார் நடிக்கும் துணிவு திரைப்படமும் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு என யார் பேனர் பெருசு என்று போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் வைத்த பேனர்களின் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள  படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

வாரிசு திரைப்படம், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதே போல், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகிறது. திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் அஜித்.

இந்த படத்தில் அஜித் உடன் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படி இரண்டு பெரிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also read... பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... நாமினேட் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

இந்நிலையில் பரங்கிமலை ஜோதி தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள துணிவு மற்றும் வாரிசு படத்தின் பேனர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. முதலாவதாக துணிவு படத்திற்காக தியேட்டரில் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தனர். அதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் துணிவு பட பேனரை விட பெரிய பேனராக வாரிசு படத்திற்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜோதி தியேட்டரில் இரு படத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Ajith