ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு, துணிவு ரிலீஸ் ஆவதில் சிக்கல்..?! தியேட்டர் பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு!

வாரிசு, துணிவு ரிலீஸ் ஆவதில் சிக்கல்..?! தியேட்டர் பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு!

துணிவு - வாரிசு போஸ்டர்கள்

துணிவு - வாரிசு போஸ்டர்கள்

தெலுங்கில் வாரிசு படத்தை ‘வாரசுடு’ என்ற பெயரில் பிரமாண்டமாக வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு பணிகளை தொடங்கியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பொங்கலையொட்டி அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் திரைக்கு வரவுள்ளன. தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

    துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பொங்கலையொட்டி இரு படங்களும் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டபோதிலும் எந்த தேதியில் படங்கள் ரிலீஸாகும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

    இதில் விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி  பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையில் வெளிவந்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

    நடிகை தீபிகா படுகோனின் கண்ணை கவரும் படங்களை பாத்தீங்களா ?

    தெலுங்கில் வாரிசு படத்தை ‘வாரசுடு’ என்ற பெயரில் பிரமாண்டமாக வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு பணிகளை தொடங்கியிருந்தார். இங்கு பொங்கல் கொண்டாடும் வேளையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன.

    இந்த நிலையில் தெலுங்கு மொழி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

    மனைவி துர்கா கேட்டதற்கு ஷாக்கான முதல்வர் ஸ்டாலின்.. மகன் உதயநிதி சொன்ன கலகல தகவல்!

    இதனால் வாரிசு மற்றும் துணிவு படங்கள் தெலுங்கு மொழி மாநிலங்களில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படியே வெளியானாலும் மிகக்குறைந்த தியேட்டர்களே கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையால் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் துணிவு, வாரிசு பட தயாரிப்பாளர்கள் தரப்பினர் உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith, Actor Vijay