வயிற்றில் குழந்தையுடன் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை

நடிகை சமீரா ஷெரீஃப்

கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவியின் பகல் நிலவு தொடர் நடிகை சமீரா ஷெரீஃப் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

  • Share this:
    ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன பாடலை பாடியுள்ளார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இயற்கை வளம், கலாசார வேர்களை போற்றும் இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுயாதீன பாடல் ஒன்று திரைப்பட பாடல்களை விட அதிக வரவேற்பைப் பெற்று வருவது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 149 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதோடு 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Sameera Sherief (@sameerasherief)






    திரைபிரபலங்கள் தொடங்கி பலரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் நடிக்கும் நடிகை சமீரா ஷெரிஃப் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published: