ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் இருக்காரா இல்லையா? வெளிவந்த தகவல்!

குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் இருக்காரா இல்லையா? வெளிவந்த தகவல்!

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

``குக் வித் கோமாளி’’ அடுத்த சீசனின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆனால் புரோமோவின் மெயின் கோமாளி புகழ் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விரைவில் தொடங்கவிருக்கும் ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் புகழ் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

குக் வித் கோமாளி புகழ், வலிமை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். பொதுவாக புகழின் சமீபத்திய இன்ஸ்டா பதிவுகள் அனைத்திலும் ரசிகர்கள் அவரிடன் வலிமை அப்டேட் பற்றிதான் கேட்பார்கள். ஆனால் இம்முறை அவரின் ரசிகர்கள் வேறு ஒரு விஷயம் குறித்து கமெண்ட் செய்துள்ளனர்.  

ஒரு குக்கிராமத்தில் பிறந்து,  படிப்பை கூட முடிக்க முடியாத சூழலில் வளர்ந்தவர் தான் புகழ். பிரசாத் ஸ்டூடியோ வாசலில் லாரி கிளீனராக வேலை செய்து கொண்டிருந்தவரை அவரின் திறமை புகழின் உச்சத்துக்கே கொண்டு சேர்த்திருக்கிறது.குக் வித் கோமாளி ஷோ மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர், தற்போது கை நிறைய படங்களுடன் வெள்ளித்திரையில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் `வலிமை’  படத்தின் டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த வியாழக்கிழமை வெளியானது. அந்த வீடியோவில் ஒரு காட்சியில் அஜித்துடன் புகழ் நடந்து வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து குக் வித் கோமாளி ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்து கொண்டாடினர்.

வலிமை டிரெய்லரில் புகழ்
வலிமை டிரெய்லரில் புகழ்

புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ”அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.. என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்…’’ என்று பதிவிட்டு அஜித் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவுக்கு பிக் பாஸ் புகழ் கவின், தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குக் வித் கோமாளி புகழ்

இதற்கிடையில் ”குக் வித் கோமாளி’’ அடுத்த சீசனின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆனால் புரோமோவின் மெயின் கோமாளி புகழ் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Cook with comali 3 promo
Cook with comali 3 promo

சினிமா ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் புகழ் இம்முறை குக் வித் கோமாளியில் பங்குபெறமாட்டார் என்று தகவல்கள் பரவின.  குக் வித் கோமாளி ரசிகர்கள் விஜய் டிவி பிரபலங்களின் இன்ஸ்டா பதிவுகளில் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் செஃப் தாமு தன் இன்ஸ்டாவில் புகழ் ரசிகர்களுக்கு பதில் அளித்து இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

செஃப் தாமுவின் ரிப்ளை..
செஃப் தாமுவின் ரிப்ளை..

குக் வித் கோமாளி புரோமோவை செஃப் தாமு சமூக வலைத்தளத்தில் பகிர, அவரின் பதிவுக்கு கீழ் பலர் ”புகழ் ஏன் புரோமோவில் இல்லை?’’  என்று  கேள்வி எழுப்பியிருந்தனர், அதற்கு அவர், ”குக் வித் கோமாளியில் கண்டிப்பாக  புகழ் இருப்பார். 100% இது உண்மை ‘’ என்று  ரிப்ளை செய்துள்ளார்.  ”எனக்கிது போதும் எனக்கிது போதும்’’ என்று புகழின் ரசிகர்கள் ஜாலியாகிவிட்டனர். புகழின் இந்த அசுர வளர்ச்சியும் ரசிகர் பட்டாளமும் உண்மையில் ஆச்சர்யப்பட வைக்கிறது. 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV show, Vijay tv