Home /News /entertainment /

தெருவில் இறங்கி ஆடிய விஜய் டிவி பிரியங்கா - லைக்ஸை குவிக்கும் வீடியோ!

தெருவில் இறங்கி ஆடிய விஜய் டிவி பிரியங்கா - லைக்ஸை குவிக்கும் வீடியோ!

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும், மற்றொரு ரியாலிட்டி ஷோவையும் பிரியங்கா, தொகுத்து வழங்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கனடாவில் சாலையில் நின்றுக் கொண்டு நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

    விஜய் டிவியில் மிகவும் பிரபலமான பெண் தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, தனது ஜாலி கேலியான பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த அவர், அங்குள்ள தெருக்களில் இறங்கி நடனமாடியுள்ளார்.

    காமெடி கவுண்டர்கள் மற்றும் பிரியங்காவின் ஜாலியான ஆங்கரிங் ஸ்டைலை மட்டும் பார்த்து பழகிய ரசிகர்கள், அவரது நடனத் திறனைக் கண்டு ஆச்சரியமடைந்து, இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் மழையை பொழிந்தனர். பிரியங்கா தற்போது 'ராஜூ வூட்ல பார்ட்டி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் அவர் 'பிக் பாஸ் 5' சக போட்டியாளர் ராஜு ஜெயமோகனுடன் இணைந்து ஆங்கரிங் செய்து வருகிறார். அதோடு விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும், மற்றொரு ரியாலிட்டி ஷோவையும் பிரியங்கா, தொகுத்து வழங்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விவகாரத்தில் முடிந்த ப்ளூ சட்டை குறும்பட விழா



    தவிர, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட விஜய் டிவி-யின் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா, கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி