• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’ திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் - படக்குழு அறிவிப்பு

நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’ திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் - படக்குழு அறிவிப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

‘கால்ஸ்’ திரைப்படத்தைக் காண பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக படக்குழு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • Share this:
தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவரது இயற்பெயரை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாகவே பெரும்பாலானோருக்கு தெரியும்.

சின்னத்திரையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் அனைவராலும் பேசப்படும் நாயகியாக வளர்ந்த சித்ராவுக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் தனது முதல் திரைப்படம் வெளியாவதற்குள் அவர் இந்த உலகத்தை விட்டு விடை பெற்று விட்டார்.

நடிகை சித்ரா வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்த படம் ‘கால்ஸ்’. இயக்குநர் ஜெ.சபரிஷ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

சித்ராவின் மரணத்துக்கு பின்னர் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிப்.26-ம் தேதி இன்று முதல் திரையரங்குகளில் ‘கால்ஸ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் சென்னையில் மட்டும் இத்திரைப்படத்தைக் காண பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.



கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: