வனிதா விஜயகுமாரிடம் மன்னிப்புக் கேட்ட நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயன் தெரிவித்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரிடம் மன்னிப்புக் கேட்ட நாஞ்சில் விஜயன்
வனிதா விஜயகுமார் | நாஞ்சில் விஜயன்
  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூபர் சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் இணைய ஊடகங்களில் பேட்டியளித்தனர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதையடுத்து தன்னைப்பற்றி அவதூறு பேசிய சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் 2 முறை போலீசில் புகாரளித்தார். அப்போது சூர்யா தேவிக்கும் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக வனிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் நாஞ்சில் விஜயனும் வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.


அதேவேளையில் சூர்யா தேவியுடன் நாஞ்சில் விஜயன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட வனிதா, கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதுதான் தமிழ் கலாச்சாரமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவிதான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.நாஞ்சில் விஜயனிடம் அவரது வீடியோக்கள் குறித்த எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். அதை நீக்குவதாகவும், அதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். அவர் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுத்து விடப்பட்டுள்ளார் என நினைக்கிறேன். திறமையான அவர் வளர்ந்து வரும் நேரத்தில் சர்ச்சைகள் தேவையில்லை என்று நினைத்ததால் அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading