• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'யாவும் நீ! யாதும் நீ...’ மகன் பிறந்த சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்ட விஜய் டிவி பிரபலம்!

'யாவும் நீ! யாதும் நீ...’ மகன் பிறந்த சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்ட விஜய் டிவி பிரபலம்!

நாம் இருவர் நமக்கு இருவர் சசிந்தர் குழந்தை

நாம் இருவர் நமக்கு இருவர் சசிந்தர் குழந்தை

மனைவியுடன் வித விதமான கர்ப்பகால புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டார் சசிந்தர்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகர் சசிந்தர் - காயத்ரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ’நாம் இருவர் நமக்கு இருவர்’. இதன் முதல் பாகத்தில் செந்தில் இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரக்‌ஷா ஹொல்லா மற்றும் ராஷ்மி ஜெயராஜ் ஆகிய இருவரும் நடித்தனர்.

    ஆனால் கடந்தாண்டு கொரோனா பாதிப்பால், பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது போல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜனனி அசோக் குமார், காயத்ரி யுவராஜ், ராஜுமோஹன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் முதல் சீசனில் நடித்து பிரபலமானவர் சசிந்தர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sasindhar Pushpalingam (@sasindhar.p)






    இதையடுத்து இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதையடுத்து மனைவியுடன் வித விதமான கர்ப்பகால புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டார்.

    இந்நிலையில் தற்போது சசிந்தர் - காயத்ரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: