மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜிக்காக விஜய் டிவி செய்த ஏற்பாடு...

விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் வடிவேல் பாலாஜியுடன் பணியாற்றியவர்கள் இணைந்து அவருக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜிக்காக விஜய் டிவி செய்த ஏற்பாடு...
வடிவேல் பாலாஜி
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 8:29 PM IST
  • Share this:
விஜய் டிவியின் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை மகிழ்வித்து பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி.

42 வயதாகும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர், சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வடிவேல் பாலாஜியின் குழந்தைகளுடைய கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொள்வதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல் பாலாஜி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி குடுமபத்தினருக்கு பண உதவி செய்திருந்தார். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி மரணித்த கலைஞனுக்கு அந்த டிவி நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சமூகவலைதளத்தில் பேச்சுகள் எழத் தொடங்கின.


இந்நிலையில் விஜய் டிவியில் பணியாற்றுவோர் இணைந்து வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான புரமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.


அதில், வடிவேல் பாலாஜி உருவப்படத்துக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் ராமர், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் கண்ணீர் தோய்ந்த முகத்துடன் அவரது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு ‘மிஸ் யூ வடிவேல் பாலாஜி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading