Home /News /entertainment /

இதான் புரொமோஷனா? ரன்பீர் கபூரை டென்ஷனாக்கிய டிடி...

இதான் புரொமோஷனா? ரன்பீர் கபூரை டென்ஷனாக்கிய டிடி...

டிடி - ரன்பீர் கபூர்

டிடி - ரன்பீர் கபூர்

ஷம்ஷேரா படம் ஜூலை 22-ம் தேதி வெளியாகும் விஷயத்தை தமிழில் கூறுகிறார் டிடி. ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்கும் ரன்பீர், டென்ஷன் ஆனது போல் கோபத்துடன் டிடி-யை தேடுகிறார்.

    ஷம்ஷேரா புரொமோஷனில் ரன்பீர் கபூருடனான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிடி. 

    தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

    தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி, காபி வித் காதல், துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் காபி வித் காதல் படத்தில் ரீமேக் செய்யப்பட்ட ரம் பம் பம் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் முழு எனெர்ஜியுடன் நடனமாடியிருந்தார் டிடி.

    இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதே போல் விஜய் டிவி சிவாங்கியும் ரன்பீருடனான படங்களை பகிர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் ஷம்ஷேரா படத்தின் புரொமோஷனுக்கு சென்றிருந்தனர்.

    அப்போ ஷாருக்கான், இப்போ ரன்பீர் கபூர் - பாலிவுட் பிரபலங்களை இம்ப்ரெஸ் செய்த டிடி!

    இதற்கிடையே தற்போது ரன்பீருடனான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் டிடி. அதில், ஆக்‌ஷன் சீக்குவென்ஸூக்காக ரெடியாகி வந்த ரன்பீர், டிடி-யின் காஸ்ட்யூமை பார்த்து என்ன இது? என்கிறார். அதற்கு, எனக்கு டான்ஸுன்னு தான் சொன்னாங்க சார். ஒரு நிமிஷம் நான் ரெடியாகிடுறேன். பட் அதுக்கு முன்னாடி டான்ஸ்.. ப்ளீஸ் சார், ப்ளீஸ் சார் என்கிறார் டிடி.




    சரி ஓகே என்று டான்ஸ் ஆடி முடித்ததும், ஆக்‌ஷனுக்காக டிடி-யை அழைக்கிறார் ரன்பீர். அதற்கு என்னால் அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லும் டிடி-யிடம் அப்போ என்ன தான் புரொமோஷன் என்கிறார். உடனே ஷம்ஷேரா படம் ஜூலை 22-ம் தேதி வெளியாகும் விஷயத்தை தமிழில் கூறுகிறார் டிடி. ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்கும் ரன்பீர், டென்ஷன் ஆனது போல் கோபத்துடன் டிடி-யை தேடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வீடியோவை பதிவிட்ட டிடி, இதுக்கு அப்புறமும் என்னை புரொமோஷனுக்கு கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்களா? எனக் கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ranbir Kapoor

    அடுத்த செய்தி