விஜய் டிவி டிடியின் மாலத்தீவு ட்ரிப் - லைக்ஸ் அள்ளும் வீடியோ

விஜய் டிவி டிடியின் மாலத்தீவு ட்ரிப் - லைக்ஸ் அள்ளும் வீடியோ

நடிகை திவ்யதர்ஷினி

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் திவ்யதர்ஷினி அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பதிவேற்றியுள்ளார்.

  • Share this:
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக, நடுவராக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி. மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்திருக்கும் இவர் டிடி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

கடந்த மாதம் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய திவ்யதர்ஷினி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது விக்ரம், நயன்தாரா நடிப்பில் வெளியான இருமுகன் படத்தின் ஹெலனா பாடலுக்கு வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடி. அந்த வீடியோ பதிவிடப்பட்ட 22 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவும் திவ்ய தர்ஷினியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திரையுலக பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு விசிட் அடித்து வருகின்றனர். நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடித்த கையோடு தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று திரும்பினார். அவரைத்தொடர்ந்து நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகை சாரா அலிகான், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். அந்த பட்டியலில் நடிகையும் தொகுப்பாளினியுமான டிடியும் இணைந்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: