• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புதிய சாதனை

குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புதிய சாதனை

ஷிவாங்கி

ஷிவாங்கி

குக்வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்.

  • Share this:
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக புகழ், ஷிவாங்கி, ஷரத், பாலா உள்ளிட்ட கோமாளிகளின் நகைச்சுவையை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சமீபத்தில் குக்வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்தது. அதில் கனி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் மூன்றாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் உதயநிதி ஸ்டாலின் உடன் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் புகழ் விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஷிவாங்கி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2 மில்லியனாக இருந்த நிலையில் தற்போது 3 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதேபோல் குக் வித் கோமாளி அஸ்வின், புகழ் உள்ளிட்டோரது இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் மில்லியன் கணக்கிலான ரசிகர்கள் பின் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: