கடந்த 3 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக 4வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 சீசன்களாக கலக்கிய மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,''இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் விலகுவதற்கான காரணத்தை மணிமேகலை அறிவிக்கவில்லை.
HM Farm House பாலக்கால் பூஜை 🙏
With God’s grace & hardwork starting to build our kutty Empire 👫 Gonna be our happy place whenever we visit Village 🌴Keep wishing us the best as always Chottiiiii’s 💛
Dream it & Do it 😎#HussainManimegalai pic.twitter.com/T8fwzsSPwg
— MANIMEGALAI (@iamManimegalai) March 6, 2023
கடந்த வார எபிசோடுக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியான நிலையில் மணி மேகலையை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். மணிமேகலை தனது பதிவில், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளருக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே விலகினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்த நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்யும்போது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ஹுசைன் மணிமகேலையின் பண்ணை வீட்டின் பாலக்கால் பூஜை, கடவுளின் அருளாலும் கடின உழைப்பாலும் குட்டி பேரரசை உருவாக்கவிருக்கிறோம். நாங்கள் கிராமத்துக்கு வரும்போதெல்லாம் இது மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள். அதை நடத்திக்காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv