பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

பிக் பாஸ் தமிழ்

முந்தைய சீசனைப் போல பார்வையாளர்கள் இல்லாமல் அக்டோபர் மாதம் கடைசி வார இறுதியில் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 • Share this:
  பிக் பாஸ் 5 ப்ரோமோ குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

  பிக் பிரதரின் இந்திய தழுவலான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. இது இந்தியில் மட்டுமல்ல, பல பிராந்திய மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

  தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரியை டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது, பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ரசிகர்களின் கூற்றுப்படி, 1, 3 போன்ற ஒற்றைப்படை சீசன்கள் பார்வையாளர்களிடையே பெரும் வெற்றி பெற்றன. அதே முறையைப் பின்பற்றி, 5-வது சீசனும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டின் உட்புற வேலைகள் நடைபெற்று வருவதாகவும், முந்தைய சீசனைப் போல பார்வையாளர்கள் இல்லாமல் அக்டோபர் மாதம் கடைசி வார இறுதியில் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சீசனின் புதிய லோகோ ஆகஸ்ட் 27 மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: