• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்

Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அகிலன் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அகிலன் அந்த சீரியலை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    bharathi kannamma akilan
    கண்மணி மனோகரன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. குழந்தைகளுடன் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

    bharathi kannamma akilan
    கண்மணி மனோகரன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    இந்நிலையில் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அகிலன் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அகிலனை மிஸ் பண்ணுவதாக, அவருக்கு ஜோடியாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் கண்மணி மனோகரன் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: