தமிழிசையை விமர்சித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா!

Web Desk | news18
Updated: June 15, 2019, 7:31 PM IST
தமிழிசையை விமர்சித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா!
அறந்தாங்கி நிஷா | தமிழிசை
Web Desk | news18
Updated: June 15, 2019, 7:31 PM IST
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை விமர்சித்து பேசியதற்காக நடிகை அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கோரியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் சேர்ந்து நகைச்சுவை செய்து வந்தார். இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் ஏராளம்

இந்நிலையில் இருவரும் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அப்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிஷா, முதலில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும் நீட் தேர்வு வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பாஜக மலரும் என்ற தமிழிசையின் கூற்றை நகைச்சுவையாக விமர்சித்தும் பேசினார்.

இந்த பேச்சுக்கு பாஜக தொண்டர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில், அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், என் மேல் அன்பு வைத்து போன் செய்த அனைவருக்கும் நன்றி. நகைச்சுவையால் தான் இந்த இடத்துக்கு வந்தேன். யார் மேல் உள்ள கோபமும் கிடையாது. தமிழிசை அக்காவை எந்தவொரு தவறான எண்ணத்திலும் பேச வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. ஆனாலும் நான் பேசியது தவறுதான். இந்த ஒருமுறை மன்னித்து விடுங்கள். திரும்பவும் அந்த தவறு நடக்காது” என்று நிஷா கூறியுள்ளார்.

பழனி பேசுகையில், “என்னுடைய அண்ணன் மகள் நீட் தேர்வினால் இறந்துவிட்டார். அதனால் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அந்த நேரத்தில் நான் திமுக கூட்டத்தில் பேசியது பலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக மனவருத்தத்தை ஏற்படுத்தியவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அப்படி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படிப் பேசவில்லை” என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா? - ஐசரி கணேஷ் பதில்

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...