‘அரண்மனை கிளி’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி

சீரியல் நடிகை மோனிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

‘அரண்மனை கிளி’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி
நடிகை மோனிஷா
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 5:54 PM IST
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் தொடங்கி 3 மாத காலத்துக்கும் மேலாக தளர்வுகள் அதிகம் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பி விட்டனர். ஆனால் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சராசரியாக நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரத்துக்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வருகின்றனர். செப்டம்பர் 20-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,86,479 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 8,811 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு குறையாத இந்த சூழ்நிலையில் முகக் கவசம், தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தொழில்துறைகள் இயங்க ஆரம்பித்துவிட்டன. சினிமா, திரைப்பட படப்பிடிப்புகள் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திரைபிரபலங்கள் சிலரும் அடிக்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் ‘அரண்மனை கிளி’ தொடரில் நடித்து வரும் நடிகை மோனிஷா, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் நலம்பெற்று திரும்ப வேண்டும் என்று அவரைப் பின் தொடரும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading