தனது க்யூட்டான இரட்டை குழந்தைகளுடன் ஈஸ்டர் கொண்டாடிய விஜய் டிவி நடிகர்!

தனது க்யூட்டான இரட்டை குழந்தைகளுடன் ஈஸ்டர் கொண்டாடிய விஜய் டிவி நடிகர்!

பிரஜின் குழந்தைகள்

தனது க்யூட்டான இரட்டை குழந்தைகளுடன் ஈஸ்டர் கொண்டாடியிருக்கிறார் சீரியல் நடிகர் பிரஜின். அந்தப் படங்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

  • Share this:
தனது க்யூட்டான இரட்டை குழந்தைகளுடன் ஈஸ்டர் கொண்டாடியிருக்கிறார் சீரியல் நடிகர் பிரஜின். அந்தப் படங்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

தொகுப்பாளினியாக அறிமுகமான சாண்ட்ரா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார். அவரும் சன் மியூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து புகழ் பெற்றவர்.

Vijay TV actor Prajin Sandra Easter Celebration
குடும்பத்துடன் பிரஜின்


ரீல் ஜோடியாக இருந்த பிரஜின் – சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிய பிரஜினுக்கு சரியான வாய்ப்பு அமையாததால் அவர் மீண்டும் டிவி சீரியலுக்கே திரும்பியுள்ளார். தற்போது பிரஜின் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையே திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான சாண்ட்ராவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.

Vijay TV actor Prajin Sandra Easter Celebration
மித்ரா - ருத்ரா


அவர்களுக்கு மித்ரா, ருத்ரா என்று பெயர் வைத்துள்ளனர் பிரஜின் - சாண்ட்ரா தம்பதியினர். தங்கள் குழந்தைகலின் இரண்டாம் பிறந்தநாளை சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் கொண்டாடினார்கள். அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். அந்த வீடியோவும் இணையத்தில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது தங்கள் அன்பு மகள்களுடன் பிரஜின் - சாண்ட்ரா இருவரும் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். நான்கு பேருமே வெள்ளை நிற உடையணிந்து மிக அழகாக தெரிகிறார்கள். அந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கின்றன. ரசிகர்கள் அந்தப் படங்களுக்கு தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு வருகிறார்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: