Sarpatta Parambarai: சார்பட்டா பரம்பரையை வாங்கிய விஜய் டிவி! அப்போ அடிக்கடி பாக்கலாம்...

சர்பட்டா பரம்பரை

ரஞ்சித் படம் என்றதும், குறியீடுகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் படத்தில் எந்த குறியீடுகளும் இல்லை என ஆர்யா கூறியுள்ளார்.

  • Share this:
    ரஞ்சித்தின் புதிய படம் சார்பட்டா பரம்பரையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் விஜய் வாங்கியுள்ளது.

    கபாலி, காலா படங்களில் ரஜினிக்காக கதை எழுதிய ரஞ்சித், எந்த கட்டுப்பாடும் இன்றி அட்டக்கத்தி, மெட்ராஸ் வரிசையில் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. எண்பதுகளில் வடசென்னையில் பிரபலமாக இருந்த பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகியுள்ளது. பாக்ஸிங் பின்னணியில் அந்தகால வடசென்னையும், அப்பகுதி மக்களின் வாழ்க்கையும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ளார்.

    ரஞ்சித் படம் என்றதும், குறியீடுகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் படத்தில் எந்த குறியீடுகளும் இல்லை என ஆர்யா கூறியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 22-ஆம் தேதி வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், திரையரங்குகள் திறப்பது தள்ளிப்போவதால் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சார்பட்டா பரம்பரையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கடும் போட்டிக்கிடையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. படம் ஓடிடியில் வெளியான சில வாரங்களில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என்கின்றன செய்திகள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: