ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நெஞ்சில் குடியிருக்கும்... வாரிசு இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்டான விஜய்யின் செல்ஃபி வீடியோ

நெஞ்சில் குடியிருக்கும்... வாரிசு இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்டான விஜய்யின் செல்ஃபி வீடியோ

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

Vijay Varisu வாழ்க்கையில் பிரச்னை வரும். பிரச்னையில்லனா என்ன வாழ்க்கைடானு நமக்கே தோணும், அதனால் அன்பைப் பகிருங்கள். அவ்ளோதாங்க வாழ்க்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

விழாவில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனும் விஜே ரம்யாவும் கலகலப்பாக தொகுத்து வழங்கினர்.

''1990ல ஒரு நடிகர் எனக்கு போட்டியா வந்தாரு.. அந்த நடிகர விட அதிகமா ஜெய்க்கணும்னு நெனச்சேன்'' - அனல் பறக்க பேசிய விஜய்!

விழாவில் பிரபலங்கள் பலரும் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசினர். நிறைவாக பேசிய நடிகர் விஜய், வாழ்க்கையில் பிரச்னை வரும். பிரச்னையில்லனா என்ன வாழ்க்கைடானு நமக்கே தோணும், அதனால் அன்பைப் பகிருங்கள். அவ்ளோதாங்க வாழ்க்கை என்று பேசினார்.

பின்னர் ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்ட விஜய் அதனை தனது மேனேஜர் ஜெகதீஷை அழைத்து நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் பதிவிட சொன்னார். தற்போது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வீடியோவை ரசிகர்கள் ரீ ட்வீட் செய்துவருகிறார்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu