Home /News /entertainment /

விஜய்யின் திருப்பாச்சி படத்திற்கு முதலில் வேறு டைட்டில்தான் வைத்திருந்தோம்… நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பேரரசு

விஜய்யின் திருப்பாச்சி படத்திற்கு முதலில் வேறு டைட்டில்தான் வைத்திருந்தோம்… நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பேரரசு

இயக்குனர் பேரரசு

இயக்குனர் பேரரசு

'டைட்டில்' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேரரசு ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் முக்கியம் என்று தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விஜய்யின் திருப்பாச்சி படத்திற்கு முதலில் வேறு டைட்டில்தான் வைத்திருந்தோம் என்று கூறி நினைவுகளை பகிர்ந்துள்ளார் இயக்குனர் பேரரசு.

தமிழ் சினிமாவில் ஊர் பெயர்களை தலைப்பாக வைத்து திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் பேரரசு. இவர் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி அடைந்தார்.

அதற்குப் பிறகு ஊர் பெயர்களை வைப்பதை வழக்கமாக்கி விட்டார்.  இந்த நிலையில் 'டைட்டில்' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேரரசு ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் முக்கியம் என்று தெரிவித்தார்.



தனக்கு தானே திருமணம் செய்துகொண்ட டிவி சீரியல் நடிகை… ஆண்களே தேவையில்லை என அறிவிப்பு

அது குறித்து பேசும்போது,  தன்னுடைய திருப்பாச்சி திரைப்படத்தின் தலைப்பு பற்றிய சுவாரஸ்ய கதையை கூறினார். அந்த திரைப்படத்திற்கு 150 தலைப்புகளை எழுதியதாகவும், அதில் திருப்பாச்சி என்ற பெயர் இல்லை எனவும் தெரிவித்தார். அந்த 150 தலைப்பில் இருந்து கிரிவலம் என்ற தலைப்பை தேர்வு செய்து நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியபோது அவர்களுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் அந்த தலைப்பை பதிவு செய்ய சென்றபோது வேறு ஒரு இயக்குனர் அதே தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார்.  அதை தங்களுக்கு கொடுக்குமாறும்,  அதற்கு பணம் கொடுப்பதாகவும் கூறினோம். ஆனால் அந்த இயக்குனர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் வேறு தலைப்பை தேடினோம் என பேரரசு கூறினார்.

கவனம் ஈர்க்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

அது குறித்த யோசனையில் இருந்தபோது தொலைக்காட்சியில் தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்ற திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா என்ற பாடல் ஒளிபரப்பானது.  அதை பார்த்தே திருப்பாச்சி என்று தலைப்பு வைத்தோம். அந்த தலைப்பு கிரிவலத்தைவிட நடிகர் விஜய்க்கு பிடித்துவிட்டது என தெரிவித்தார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி