இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே புதுமுக இயக்குனராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இந்த படத்தில் தில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி ஜெயிலில் இருந்து வெளியாகி தனது மகளை பார்க்க ஆசையாக காத்திருப்பார்.அப்போது போதை பொருள் கடத்தும் கும்பல்களை போலீஸ் தாக்க முயலும் போது தில்லியின் உதவி போலீஸுக்கு தேவைப்படும்.தில்லி போலீஸின் சார்பாக நின்று எதிரிகளுடன் போராடுவார். இந்த படம் முழுவதும் இரவில் படமாக்கப்பட்டிருக்கும். சத்தமில்லாமல் வெளியான கைதி படத்திற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் சத்தம் எழுப்பினார்கள்.
கைதியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கொரோனா லாக்டவுனிற்கு பிறகு வெளியான முதல் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். மற்ற படங்களை லோகேஷ் கனகராஜ் முழுவதுமாக அவரது ஸ்டைலில் எடுத்திருப்பார். மாஸ்டர் படத்தை 50 சதவிகிதம் மட்டுமே தன்னுடைய ஸ்டைலில் எடுத்ததாக பல நேர்காணலில் கூறியுள்ளார்.
ஜூன் 3 ஆம் தேதி கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியானது.இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருந்தது. லோகேஷ் ஒரு தீவிரமான கமல் ரசிகர் என்பதால் ஃபேன் பேய் சம்பவம் செய்திருந்தார். படம் ரிலீஸாகி உலகம் முழுவதும் இதுவரை 300 கோடிக்கும் மேல் வசூலை பெற்று வருகிறது. இந்த வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடினார். மேலும் கமல்ஹாசன் லெக்சஸ் காரை லோகேஷ் கனகராஜிற்கு பரிசாக அளித்தார்.லோகேஷின் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கை பரிசாக அளித்தார் கமல்.
இந்நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளார். இந்த படத்தின் அப்டேட் விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ.10 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.