ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துவங்குவதற்கு முன்பே பல கோடி சம்பாதித்த விஜய்யின் தளபதி 67?

துவங்குவதற்கு முன்பே பல கோடி சம்பாதித்த விஜய்யின் தளபதி 67?

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய்யின் தளபதி 67 திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே ஓடிடி உரிமையில் பல கோடி சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் விஜய்யின் 67 படத்திற்காக மீண்டும் இணைய உள்ளனர். இதற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாக இப்படம் உருவாகவிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 'தளபதி 67' இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2021-ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படமான 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  எனவே, படத்தின் வணிகம் ஏற்கனவே பல துறைகளில் தொடங்கியுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் ரூ 160 கோடிக்கு OTT உரிமையை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் பாதி பட்ஜெட்டை இப்போதே ஈடுகட்டியுள்ளதாக தெரிகிறது.

  மீண்டும் கமல் ஹாசனுடன் இணையும் விஜய் சேதுபதி?

  'தளபதி 67' திரைப்படம் கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் டிசம்பரில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெறும். சஞ்சய் தத், நிவின் பாலி, விஷால், மன்சூர் அலி கான், கவுதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள நிலையில், அதில் த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay