முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதி 67 ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி 67 ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி 67

தளபதி 67

தளபதி 67 படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 2021-ல் மாஸ்டர் படம் வெளியாகி கொரோனா தொற்றுநோயால் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை மீண்டும் உயிர் பெறச் செய்தது. அதன் பிறகு கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். படம் அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, இயக்குநரின் மார்க்கெட்டையும் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் இணைவதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநரும் பல இடங்களில் உறுதிப்படுத்தினார். இருப்பினும் பல மாதங்களாக இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் சில தினங்கள் முன்பு விஜய் - லோகேஷ் கனகராஜ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தளபதி 67 என்றழைக்கப்படும் இப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. அதோடு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், நடிகைகள் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும் தளபதி 67-ல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர்கள் வேலாயுதம், தலைவா, சர்கார், பிகில், மாஸ்டர் ஆகியப் படங்கள் மூலம் விஜய்யுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay