Thalapathy 65: ’தளபதி 65 படத்திற்குப் பிறகு கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளை மறந்து விடுவீர்கள்’!

Thalapathy 65: ’தளபதி 65 படத்திற்குப் பிறகு கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளை மறந்து விடுவீர்கள்’!

நடிகர் விஜய்

கே.ஜி.எப் படத்தின் சிறப்பான சண்டைக் காட்சிக்காக தேசிய விருதையும் பெற்றனர்.

  • Share this:
    விஜய் தனது அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடன் அறிவித்துள்ளார். ‘தளபதி 65’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து தளபதி 65 குறித்த விஷயங்கள் நாள்தோறும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்த தகவல் ஒன்று இணையத்தி வெளியாகி, விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    Thalapathy Vijay: விஜய்யுடன் நடித்த குட்டிப்பாப்பா இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!



    தளபதி 65 படத்தில் சண்டை இயக்குநர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்றுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றிய இவர்கள், கே.ஜி.எப் 1 படத்திலும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருந்தனர். அதோடு அந்தப் படத்தின் சிறப்பான சண்டைக் காட்சிக்காக தேசிய விருதையும் பெற்றனர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.



    இந்நிலையில் தளபதி 65 படத்திற்குப் பிறகு கே.ஜி.எப் படத்தின் சண்டைக் காட்சியை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்றும் அந்தளவுக்கு விஜய்யின் தளபதி 65 படம் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும், அன்பறிவ் குழுவில் இடம்பெற்றுள்ள திலீப் குமார் தெரிவித்துள்ள வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    அனிருத் இசையமைக்கும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: