நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய். அவரின் பிறந்தநாளின் போது ரசிகர்கள் கூடுதல் உற்சாகமடைந்து கொண்டாடி தீர்ப்பார்கள்.
குறிப்பாக
விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடும். அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 65 பட
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கடந்த சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், வரும் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ‘என்ன நண்பா ஃபர்ஸ்ட் லுக்கா? செஞ்சிட்டா போச்சி’ என்ற மினி வீடியோவின் மூலம் இந்த
அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளர்.
தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்