Thalapathy 65: 'இந்த அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணம்’ பிரபல ஒளிப்பதிவாளர் ட்வீட்!

Thalapathy 65: 'இந்த அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணம்’ பிரபல ஒளிப்பதிவாளர் ட்வீட்!

நடிகர் விஜய்

“மாநிலத்தில் நேசிக்கப்படும் இந்த அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்."

  • Share this:
    தளபதி 65 படத்தில் இணைந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    பொங்கலுக்கு விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். கொரோனாவுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான முன்னணி நடிகரின் படம் என்ற வகையில், மாஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    Suriya: பாலிவுட் நடிகையை கவர்ந்த சூர்யா!

    இதனையடுத்து விஜய்யின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ‘தளபதி 65’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதன் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தளபதி 65 குறித்த அப்டேட்டுகள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.



    இந்தப் படத்தில் சண்டை இயக்குநர்களாக அண்பறிவ் பணியாற்றுவதாக நேற்று தகவல் வெளியானது. கே.ஜி.எப் 1 மற்றும் 2-ல் ஸ்டண்ட் டைரக்டர்களாக பணியாற்றியுள்ள அவர்கள், தளபதி 65 படத்துக்குப் பிறகு கேஜிஎப்-ன் சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் எனக் கூறியதாக, அன்பறிவின் டீமை சேர்ந்த திலீப் குமார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்திருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “மாநிலத்தில் நேசிக்கப்படும் இந்த அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் முழு தேசமும் அவரை நேசிக்கும். ’நண்பனை’ விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் வேலை செய்ய காத்திருக்கிறேன். தளபதி 65 ஒரு பான் இந்தியா படமாக இருக்கும்! எல்லோரும் தயாராகுங்கள்...” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: