கேரளாவில் மீண்டும் விஜய்யின் சுறா ரிலீஸ்!

கேரளாவில் மீண்டும் விஜய்யின் சுறா ரிலீஸ்!
சுறா படத்தில் விஜய்
  • Share this:
கேரளாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடிகர் விஜய் நடித்த சுறா படத்தை மீண்டும் திரையிட உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். தமிழகத்தைப் போல் விஜய் படங்கள் கேரளாவில் ரிலீசாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

இந்நிலையில் வரும் குடியரசு தினத்தில் கேரளாவில் உள்ள ஜிமேக்ஸ் திரையரங்கில் சுறா படம் திரையிடப்படுகிறது. அதற்காக இப்போதிருந்தே டிக்கெட்டுகளை வாங்கியுள்ள ரசிகர்கள், அதை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அதில் டிக்கெட் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்களும் இடம்பெற்றுள்ளன.


எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் சுறா. மணிசர்மா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். விஜய்யின் 50-வது படமாக வெளியான சுறா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக எதிர்மறையான விமர்சனங்களையே இந்தப் படம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



மாஸ்டர் செகண்ட் லுக்... விஜய் - சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு!
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்