முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யின் சுறா பட இயக்குனருடன் இணையும் யோகி பாபு… வெளியானது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

விஜய்யின் சுறா பட இயக்குனருடன் இணையும் யோகி பாபு… வெளியானது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

லோக்கல் சரக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

லோக்கல் சரக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சுறா படத்திற்கு முன்பாக பிரபு நடித்த பொன்மனம், என் உயிர் நீதானே, லிவிங்ஸ்டன் நடித்த என் புருஷன் குழந்தை மாதிரி, மம்முட்டி நடித்த கார்மேகம் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் சுறா படத்தை இயக்கிய எஸ்.பி. ராஜ் குமார் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

விஜய், தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சுறா திரைப்படம் 2010-ல் வெளியானது. இந்தப்படத்தில், மீனவர் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். கொடூரமான அமைச்சரை எதிர்த்து, மீனவரான விஜய் தனது மக்களுக்காக நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தப்படத்தில் வடிவேலு - விஜய் இடம்பெறும் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருப்பினும் ஒருசில காட்சிகள் மிகைப்படுத்தி காணப்பட்டதால் மீம் கிரியேட்டர்களின் முக்கிய கன்டென்டாக சுறா படம் மாறியது.

Sarath Chandran : பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் அதிர்ச்சி

இந்த படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியிருந்தார். சுறா படத்திற்கு முன்பாக பிரபு நடித்த பொன்மனம், என் உயிர் நீதானே, லிவிங்ஸ்டன் நடித்த என் புருஷன் குழந்தை மாதிரி, மம்முட்டி நடித்த கார்மேகம் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

லோக்கல் சரக்கு ஃபர்ஸ்ட் லுக்

சுறா படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், ராஜ்குமாருக்கு அடுத்து வந்த இரண்டு படங்களும் வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவை, வைத்து லோக்கல் சரக்கு என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

தமிழ்நாட்டில் ப்ரியா பவானி சங்கருக்கு பிடித்த ஊர் இதுதான்…

இந்த திரைப்படத்தை டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பாக, பி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். லோக்கல் சரக்கு படத்தில் யோகிபாபு உடன் நடன இயக்குனர் தினேஷ் இடம்பெறுகிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

First published:

Tags: Actor Yogibabu