வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் நல்ல வருவாயை படம் ஈட்டியது. அதன்படி உலக அளவில் படம் ரூ.300 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியான படம் அங்கும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து டெலிட்டட் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் பிரகாஷ் ராஜ் அலுவலகத்திற்கு சென்று கபடி கபடி... என மாஸ் காட்டுகிறார் விஜய். ரசிகர்களுக்கு செம டிரீட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தற்போது வரை 4 மில்லியன் பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ள இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.
நன்றி: Prime Video India.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Movie Videos, Varisu