Home /News /entertainment /

ரெட் ஜெயன்ட் வெற்றிப் பட வரிசையில் இடம்பெறாத பீஸ்ட்… உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தம்

ரெட் ஜெயன்ட் வெற்றிப் பட வரிசையில் இடம்பெறாத பீஸ்ட்… உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தம்

பீஸ்ட் விஜய்

பீஸ்ட் விஜய்

Beast Udhayanidhi : வசூலை வாரிக் குவித்ததாக பீஸ்ட் படம் பேசப்படும் நிலையில், ரெட்ஜெயன்ட் நிறுவனத்திடம் இருந்து இப்படியொரு ஸ்டேட்டஸ் வந்திருக்கிறது.

    ரெட் ஜெயன்ட் வெளியிட்டுள்ள வெற்றிப் பட வரிசையில் விஜய்யின் பீஸ்ட் இடம்பெறவில்லை. இதனால் உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

    நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி, ரெட் ஜெயன்ட் என்ற சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். முன்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலும் விநியோகம் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.

    இந்தாண்டு ரெட் ஜெயன்ட் வெளியிட்ட பெரும் பாலான படங்கள் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் ரெட்ஜெயன்ட்டின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள் என்று ஒரு பதிவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க - இன்று வெளியாகிறது விஜய் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    இந்த பதிவில், ரெட் ஜெயன்ட் மூவிஸில் பணியாற்றும் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புகைப்படங்களுடன்,  ‘இவர்கள்தான் எஃப்.ஐ.ஆர்., காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பின்னால் இருந்து உழைத்தவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த பதிவு ட்விட்டரில் வெளியானதும், எங்கே விஜய் நடித்த பீஸ்ட் என்று விஜய் ரசிகர்கள் தேடிப் பார்த்தனர். ஏனென்றால் சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிட்டது.

    இருப்பினும் இவ்வளவு பெரிய படத்தின் பெயர் ட்விட்டர் பதிவில் இடம்பெறாதது ஏன் என்ற வருத்தத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். ஒருவேளை உண்மையிலே பீஸ்ட் வெற்றிப் படமாக அமையாததால் விடுபட்டிருக்கலாமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

    இதையும் படிங்க - என் காலை கீற்றே நீ தானே... பூஜா ஹெக்டேவின் நியூ போட்டோஸ்!

    மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி, அடுத்த நாள் வெளியான கே.ஜி.எஃப்.  2 படத்துடன் மோதியது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான விஜய் நடித்த போதிலும், பலவீனமான திரைக்கதையால் மோசமான விமர்சனங்களை பீஸ்ட் எதிர்கொண்டு விமர்சன ரீதியில் தோல்வி அடைந்தது.

    இருப்பினும் வசூலை வாரிக் குவித்ததாக பீஸ்ட் படம் பேசப்படும் நிலையில், ரெட்ஜெயன்ட் நிறுவனத்திடம் இருந்து இப்படியொரு ஸ்டேட்டஸ் வந்திருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி